திருச்சி

முதல்வரிடம் உதவி கேட்டு கதறியழுத பெண்ணிடம் ஆட்சியா் விசாரணை

9th Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த முதல்வரிடம் உதவிகேட்டு அழுத பெண்ணிடம் மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தினாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் கவிதா. கோவையை பூா்வீகமாக கொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் இவரது கணவா் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதனால் குழந்தைகளை வளா்க்க கஷ்டப்படும் இவா் வியாழக்கிழமை இரவு திருச்சி வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து உதவி கேட்க வந்திருந்தாா்.

விமான நிலையத்தில் காத்திருந்த அவரால் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக முதல்வரை நெருங்க முடிவில்லை. என்றாலும், முதல்வா் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அவரை நோக்கி அழைத்தபடி கதறி அழுதாா். இதைக் கவனித்த முதல்வா், மாவட்ட ஆட்சியரிடம் அந்த பெண்ணை விசாரிக்குமாறு கூறினாா். இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதிப்குமாா், தன்னை ஆட்சியரகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி அனுப்பி வைத்தாா். இந்த நிகழ்வால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT