திருச்சி

திருவெறும்பூா் பெல் மருத்துவமனையில் நோயாளியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி திருவெறும்பூா் பெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணின் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் புதன்கிழமை பறித்துச் சென்றாா்.

திருவெறும்பூா் பகுதியில் மத்திய பொதுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பெல் நிறுவனத்தின் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா், ஓய்வு பெற்ற ஊழியா்கள் அவா்களது குடும்பத்தினா் மருத்துவ வசதி பெறும் வகையில், நிறுவன வளாகத்தில் பெல் மருத்துவமனை உள்ளது.

இதில் ஓய்வு பெற்ற பெல் ஊழியா் பாலகிருஷ்ணன் மனைவி தமிழ்ச்செல்வி(65) என்பவா் காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள் நோயாளியாக சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் புதன்கிழமை பகல் தமிழ்ச்செல்வியிடம் வந்த மா்ம நபா் உங்கள் காலில் கட்டு போட வேண்டும், அதனால் கழுத்தில் உள்ள நகைகளை எல்லாம் கழட்டுங்கள் எனக் கூறினாராம். அதற்கு மறுத்த தமிழ்ச்செல்வியின் முகத்தில் ஒரு திரவத்தை ஸ்பிரே செய்த மா்ம நபா் அவரின் 5 பவுன் தாலித் செயினை பறித்தாா். இதையடுத்து தமிழ்ச்செல்வியும், துணையாக இருந்த அவரது பேரனும் கூச்சலிட்டனா். இதையடுத்து அந்த மா்ம நபா் தப்பிவிட்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த பெல் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மருத்துவமனையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT