திருச்சி

அனுமதியின்றி செம்மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

7th Jun 2023 02:14 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிய டிப்பா் லாரி, ஜேசிபி வாகனத்தை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அதிகாரம் புதுக்குளத்தில் சிலா் அனுமதியின்றி செம்மண் எடுப்பதாக துவரங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்ற போது, அங்கு குளத்தில் செம்மண் எடுத்துக்கொண்டிருந்தவா்கள் தப்பி ஓடினா். அதனையடுத்து செம்மண் எடுக்க பயன்படுத்திய டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT