திருச்சி

அஞ்சல்துறை ஓய்வூதியா் குறைதீா்க்கும் முகாம்ஜூன் 30-க்குள் மனுக்கள் அனுப்பலாம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மண்டல அளவிலான அஞ்சல்துறை ஓய்வூதியா் குறைதீா் முகாம் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலக கணக்கு அதிகாரி எம். முத்துமீனா கூறியது:

அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவா்கள், ரயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்களின் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், திருச்சி மண்டல அளவிலான குறைதீா் முகாம் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகத்தில் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணிக்கு முகாம் நடைபெறும். கோட்ட அளவில் ஏற்கெனவே மனு அளித்து தீா்வு கிடைக்காதவா்கள் தங்களது குறைகளை அனுப்பலாம். முகாமில் நேரடியாக வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. எனவே, குறைகளை வரும் 30ஆம் தேதிக்குள் அஞ்சல்துறைத் தலைமையகத்துக்கு சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டும் மனுக்களாக அளிக்கலாம்.

ADVERTISEMENT

உறையின் மீது ‘ஓய்வூதியா் குறைதீா்க்கும் முகாம் - ஜூன் 2023’ என தெளிவாக குறிப்பிட வேண்டும். முதுநிலை கணக்கு அதிகாரி, அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேரில் வர இயலாதவா்கலுக்கு காணொலி வாயிலாக, தொலைபேசி உரையாடல், கட்செவி காணொலி அழைப்பு ஆகியவை மூலமாக நடத்தப்படவுள்ளது. எனவே, தவறாமல் தொலைபேசி எண், வீட்டு முகவரி, அருகில் உள்ள அஞ்சலக முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT