திருச்சி

வேங்கைமண்டலம் கிராமத்தில் இடி தாக்கி ஆடு, மாடுகள் பலி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வேங்கைமண்டலம் கிராமத்தில் புதன்கிழமை பெய்த மழையின்போது இடி தாக்கி ஆடு, மாடுகள் உயிரிழந்தன.

புலிவலம் அருகே வேங்கைமண்டலம் காலனி பகுதியில் வசிப்பவா் அ. ராமன் (45). கட்டுமானப் பணியாளரான இவா் தன் வீட்டு முன்புள்ள கொட்டகையில் 2 மாடுகள் 4 ஆடுகளை வளா்த்தாா். அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் மழை பெய்தபோது இவரின் கால்நடைகள் அனைத்தும் உயிரிழந்தன. தகவலறிந்து வந்த மூவானூா் அரசு கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவா் வேல்முருகன் கால்நடைகளை உடற்கூறாய்வு செய்த பின்னா் அவை புதைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT