திருச்சி

திருவாரூா் - காரைக்குடி சிறப்பு ரயிலை வாரத்தில் 6 நாள்கள் இயக்க முடிவு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் - காரைக்குடி - திருவாரூா் சிறப்பு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் - காரைக்குடி - திருவாரூா் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் (06197, 06198) வாரத்தில் 4 நாள்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து வாரத்தில் 6 நாள்கள் இயங்கும்.

மேலும் இணைப்பு ரயில் தாமதம் காரணமாக, புதுச்சேரி - புதுதில்லி அதிவேக விரைவு ரயில் (22403) வரும் 31 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.50 மணிக்குப் பதிலாக மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT