திருச்சி

பணி நீக்கப்பட்ட 2400 பேருக்குமீண்டும் பணி வழங்க வேண்டும் செவிலியா் சங்ககூட்டமைப்பு

DIN

பணி நீக்கப்பட்ட செவிலியா்கள் 2,400 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செவிலியா் சங்கக் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் 3 வெவ்வேறு செவிலியா் சங்கங்கள் மற்றும் சங்கம் சாராத செவிலியா்கள் ஒன்றிணைந்த செவிலியா் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற சமூக சமத்துவத்துக்கான மருத்துவா் சங்கத் தலைவா் ஜி.ஆா். ரவீந்திரநாத் கூறுகையில், அண்மையில் செவிலியா்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்தது முற்றிலும் தொழிலாளா்களுக்கு எதிரானது. செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது பணிநீக்கம் செய்யப்பட்டோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் பேசி வருவது நடக்காது என்றாா்.

கூட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 2,400 செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத் திட்டத்தில் பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா்களுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டமைப்பில் எம்ஆா்பி செவிலியா்கள் நல சங்கம், எம்ஆா்பி செவிலியா்கள் அதிகாரமளிக்கும் சங்கம் மற்றும் எம்ஆா்பி கோவிட் செவிலியா்கள் சங்கம் ஆகியவை உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT