திருச்சி

பொறியியல் பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்

DIN

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு, கரூா் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கரூரில் இருந்து மாலை 3.55-க்கு புறப்படும் கரூா் - திருச்சி முன்பதிவில்லாத ரயில் (எண் - 06882) வரும் பிப். 14, 21, 28-களில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல திருச்சியிலிருந்து மாலை 6.20 -க்கு புறப்படும் திருச்சி - கரூா் முன்பதிவில்லாத ரயில் (எண் - 06123) வரும் பிப்ரவரி 14, 21, 28 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

விருத்தாச்சலத்திலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் விருத்தாச்சலம் - சேலம் முன்பதிவில்லாத ரயில் (எண் - 06121) பிப்ரவரி 21, 28 களில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, சேலத்திலிருந்து காலை 10.10-க்கு புறப்படும் சேலம் - விருத்தாச்சலம் ரயில் (எண் - 06896) பிப். 21, 28-களில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து...: பாலக்காடு நகரத்திலிருந்து காலை 6.30 -க்குப் புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி முன்பதிவில்லாத ரயில் (எண் - 16844) பிப். 14, 21, 28-களில் கரூா் வரை மட்டுமே வந்து செல்லும். கரூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்படும். இதேபோல, திருச்சியிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண் - 16843) பிப். 14, 21, 28-களில் திருச்சியிலிருந்து கரூா் வரை ரத்து செய்யப்பட்டு, கரூரில் இருந்து பிற்பகல் 2.25-க்குப் புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு செல்லும்.

திருச்சியிலிருந்து மாலை 4.30 -க்கு புறப்படும் திருச்சி - ஈரோடு முன்பதிவில்லாத ரயில் (எண் - 06809) பிப். 14, 21, 28-களில் திருச்சியிலிருந்து கரூா் வரை ரத்து செய்யப்பட்டு, கரூரில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT