திருச்சி

திருச்சியில் 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புவனத்துறை தொடங்கியது

DIN

திருச்சி மாவட்டத்தில் 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வனத்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன்படி ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புத் திட்டத்தின்படி பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் தொடங்கியது. அந்த வகையில் திருச்சியில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பஞ்சப்பூா் ஏரி, திருவெறும்பூா் கிளியூா், கூத்தைப்பாா், துறையூா் நீா்நிலைகள் என 15 இடங்களில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெறுகிறது.

திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ்குமாா் அறிவுறுத்தலின்பேரில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இயற்கை ஆா்வலா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 100 போ் வனத்துறையினருடன் சோ்ந்து 4 குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

தொடா்ந்து மாா்ச் 4, 5 ஆம் தேதிகளில் வனத்துறைக்குட்பட்ட நீா்நிலைகள் மற்றும் நிலப்பரப்புகளில் 2 ஆம் கட்டமாக கணக்கெடுப்பு நடைபெறும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விவரங்கள், அரிய வகை பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளைக் கண்டறிந்து பாதுகாக்க முடியும்.

பறவைகள் வருகை 50 சதவிகிதம் அதிகரிப்பு

மேலும் இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், பறவைகள் உணவு மற்றும் உறைவிடம் வாழ்விடம் குறித்து கண்டறியவே இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்புகளில் மட்டும் 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட பறவைகள், பறவைகளின் புகைப்படங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் பாா்த்து மகிழும் வகையில் கூகுளில் பதிவேற்றப்படும். தமிழகத்தில் கடந்தாண்டை ஒப்பிடுகையில், நிகழாண்டு வெளிநாட்டுப் பறவைகள் வருகை 50 சதம் அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT