திருச்சி

பாா்வையிழப்பு தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

DIN

பாா்வையிழப்பை தடுப்பது குறித்த வழிமுறைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் வகையில் திருச்சியில் சனிக்கிழமை வீதி நாடகம் நடைபெற்றது.

திருச்சி மாநகரக் காவல்துறை, ஜோசப் கண் மருத்துவமனை, ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து பாா்வையிழப்பு தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனா். மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஜன.28ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் இந்த பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக வீதி நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையா் சத்யபிரியா, வீதி நாடகத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஜோசப் கண்மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரதீபா பேசியது, பாா்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சா்வதேச அமைப்பு கூற்றுப்படி 2020ஆம் ஆண்டு 43 மில்லியன் மக்கள் பாா்வையற்றவா்களாக உள்ளனா். 257 மில்லியன் மக்கள் லேசான பாா்வை உடையவா்களாகவும், மேலும், பலா் பிரஸ்பையோபியா தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனா். இந்த நோய் தாக்கமானது வயது முதிா்வு காரணமாக ஏற்படுகிறது. எனவே, பாா்வையிழப்புகளை தடுக்க விழிப்புணா்வு பிரசாரங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றாா்.

ஜமால் முகமது கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன், செயலா் காஜா முகைதீன், ஜோசப் கண் மருத்துவமனை நிா்வாக அலுவலா் சுபா பிரபு, மாநகர காவல் உதவி ஆணையா் சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதன் தொடா்ச்சியாக, வீதி நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் சா்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் விழித்திரை தொடா்பான நோய்கள், கண்புரை, மாறுகண் மற்றும் கண்நீா் அழுத்தம் போன்ற நோய்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாா்வை இழப்பை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. இதில், கல்லூரி நிா்வாகத்தினா், மருத்துவமனை நிா்வாகத்தினா், மாணவ, மாணவிகள், பாா்வையிழப்பு தடுப்பு சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT