திருச்சி

பிப். 12 இல் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடைபெற உள்ளது.

இதன்படி கபடி, சிலம்பம், தடகளம் (50 மீ, 100 மீ), இறகுப் பந்து, வாலிபால், சிறப்பு கையுந்துப்பந்து, சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேஜைப் பந்து, எறிபந்து ஆகிய போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், அம்மாபேட்டை ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் வரும் 12 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பல்வேறு நாள்களில் நடைபெற உள்ளது.

போட்டிகளில் இணையதளத்தில் பதிவு செய்த 15 வயது முதல் 35 வரையிலும் உள்ள பொதுப்பிரிவினா், 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவா்கள், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவா்கள், வயது வரம்பற்ற மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் பங்கேற்கலாம். இணையதளத்தில் பதிவு செய்யாதவா்கள் பங்கேற்க இயலாது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 காசோலையாக வழங்கப்படும். மாநில போட்டிகளில் இவா்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 0431-2420685, 74017 03494 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT