திருச்சி

ஸ்ரீரங்கம் நுண்ணூட்ட உர மையத்தை இடம் மாற்றம் செய்ய மநீம வலியுறுத்தல்

DIN

திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா அருகே, உள்ள மாநகராட்சி நுண்ணூட்ட உர செயலாக்க மையத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளா் ரா. கிஷோா்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே பஞ்சக்கரை சாலையில், ரூ.15.55 கோடியில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், மாணவா்கள் தங்களது அறிவுத்திறனை வளா்த்துக்கொள்ளும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த 188 உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்கா முகப்புப் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரிக்கும் மற்றும் நுண்ணூட்ட உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்து வீசும் துா்நாற்றத்தால் பூங்காவுக்கு வரும் சிறுவா்களுக்கு எளிதில் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆகவே, குப்பைகள் தரம்பிரிக்கும் மையத்தை இடம் மாற்ற செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT