திருச்சி

திருச்சியில் பிப். 13-இல் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

DIN

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் பிப். 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநா் (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் பிப். 13 ஆம் தேதி திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி பெறாதவா்கள், 2018-19, 2019-20, 2021-22 ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐடிஐ பயிற்சியாளா்கள், 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

திருச்சி மாவட்ட சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது, நிறுவனத்தாரால் உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT