திருச்சி

கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் ஆட்சியா்

DIN

கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லாத திருச்சி மாவட்டத்தை உருவாக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

கொத்தடிமைத் தொழிலாளா்கள் முறையை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, காவல்துறை, தொழிலாளா் நலத்துறை, தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசு உறுதியேற்றி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து திருச்சி மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சி வகுப்பில், தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன், பேசியது: கொத்தடிமை தொழிலாளா் முறை குறித்த புகாா்கள் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும். கொத்தடிமை சூழல் இருந்ததற்கான ஆதாரங்களை விசாரித்து, சரிபாா்த்துச் சேகரிக்க வேண்டும். அத்துடன் தொழிலாளா்களுக்குச் சேர வேண்டிய சம்பள நிலுவைத் தொகை உடனடியாகத் தாமதமின்றி தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீட்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவா்களுக்கு விடுவிப்புச் சான்றிதழ் வழங்கவேண்டும். அவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் போதிய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தரவேண்டும். மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு, மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளா் மறுவாழ்வு நிதியிலிருந்து ரூ. 20 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தொழிலாளா் துறை, ஐஜேஎம் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த பயிற்சி வகுப்பை நடத்தியது. முன்னதாக கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழியேற்றனா். இந்த பயிற்சி வகுப்பில், அனைத்துத் துறை அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT