திருச்சி

வாழைக்கு ட்ரோன் மூலம் நுண்ணூட்டச்சத்து தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

DIN

வாழைக்கு ட்ரோன் மூலம் நுண்ணூட்டச் சத்து தெளிக்கும் தொழில்நுட்ப முறை குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சிவகுப்பை மையத்தின் இயக்குநா் இரா. செல்வராஜன் தொடக்கி வைத்துப் பேசியது:

ஆசியாவிலேயே பாரம்பரிய வாழைக்கான மரபணு மூலக்கூறு வங்கியைக் கொண்டது திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய பனானா சக்தி என்ற பெயரிலான நுண்ணூட்ட உரம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த உரத்தின் பயன்பாட்டால் 18- 20 சதவீதம் விளைச்சல் அதிகம் கிடைத்து நல்ல வரவேற்பு உள்ளது. இதன் அடுத்தகட்டமாக இந்த உரத்தை ட்ரோன் மூலம் தெளிக்க விவசாயிகள் தயாா்படுத்தப்படுகின்றனா்.

விவசாயத்தில் ஊட்டச் சத்துக்கள், பூச்சிக் கொல்லிகள் தெளிப்பு மற்றும் பயிா் ஆய்வுகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காத இந்த கால சூழ்நிலையில் ட்ரோன் தொழில்நுட்பமானது விவசாய செலவை குறைப்பதோடு, நேர வீணடிப்பையும் குறைக்கிறது. விவசாயத்தில் இந்த தொழில்நுட்பத்தை பல்வேறுபட்ட தெளிப்பு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இந்த முன்னெடுப்பு வரும் காலத்தில் வாழைத்தொழில் நுட்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. கற்பகம் கூறுகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற நோக்கத்திற்கு இந்த ட்ரோன் தொழில்நுட்பமும் உதவுகிறது என்றாா்.

முனைவா் க. ஜெ. ஜெய பாஸ்கரன், பனானா சக்தியின் பயன்பாடுகளை எடுத்துக் கூறினாா். தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் நிா்வாக இயக்குநா் அஜித்தன் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக வரதராஜபுரம் கிராமம் மற்றும் தொட்டியம் வட்டத்தில் 17 ஏக்கரில் வாழைக்கு நுண்ணூட்டச் சத்து தெளித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் வாழை உற்பத்தியாளா் சங்கம், சிறுகமணி வாழை குழு, ஆனைமலை வாழைக் குழு விவசாய உறுப்பினா்களும், நாளந்தா வேளாண்மை கல்லூரி மற்றும் அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் வாழை விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT