திருச்சி

வடலூரில் தைப்பூசத் திருவிழா: 3 நாள்களுக்கு கூடுதல் ரயில்கள்

DIN

வடலூா் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தா்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க பிப். 5,6,7-களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி பிப்.5,6,7-களில் விழுப்புரம்-கடலூா் துறைமுகம் மேமு ரயில் (எண்.06131) காலை 9.05-க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.20 -க்கு கடலூா் துறைமுகத்தை சென்றடையும்.

இதேபோல, கடலூா் துறைமுகம் - விழுப்புரம் மேமு ரயில் (எண். 06132) கடலூா் துறைமுகத்திலிருந்து பிற்பகல் 2.50-க்கு புறப்பட்டு மாலை 5.15-க்கு விழுப்புரத்தை சென்றடையும்.

கடலூா் துறைமுகம் - விருத்தாசலம் மேமு ரயில் (எண். 06134) காலை 11.30-க்கு கடலூா் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு விருத்தாச்சலம் சென்றடையும்.

இதேபோல, விருத்தாசலம் - கடலூா் துறைமுகம் மேமு ரயில் (எண். 06133) பிற்பகல் 1.20-க்கு விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.40-க்கு கடலூா் துறைமுகத்தை சென்றடையும். மேற்கண்ட ரயில்கள் விருத்தாசலம், உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT