திருச்சி

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக திகழ்கின்றன

25th Apr 2023 02:14 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக திகழ்கின்றன என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி மலை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாகனத்தை தொடக்கி வைத்து பேசியது: 2023-24 ஆம் ஆண்டு புதிய மாணவா்கள் சோ்க்கைக்கான விழிப்புணா்வை தொடங்கியுள்ளது பெருமையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு 11 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். இது தமிழக அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முைான் கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரத்து 299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறையின் தனி பட்ஜெட்டில் கூட இவ்வளவு நிதி ஒதுக்கப்படவில்லை.

தற்போது அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக திகழ்கின்றன. எனவே, அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள், உதவிகள், சந்தேகங்களை பெற்றோா்கள் தெரிந்து கொண்டு தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்த்திட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக, நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலமுரளி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் பேபி, திருவெறும்பூா் வட்டார கல்வி அலுவலா் ரெஜி பெஞ்சமின், பள்ளி தலைமையாசிரியா் கருணாம்பாள், திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT