திருச்சி

திருச்சி - காரைக்கால் ரயில் சேவையில் இன்று மாற்றம்

15th Apr 2023 12:21 AM

ADVERTISEMENT

திருவாரூரில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி - காரைக்கால் ரயில் சேவையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சியிலிருந்து காலை 10.45 மணிக்குப் புறப்படும் திருச்சி - காரைக்கால் முன்பதிவில்லா விரைவு ரயிலானது (06880) சனிக்கிழமை (ஏப். 15) திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சனிக்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்கால் - திருச்சி விரைவு ரயிலானது (06739), காரைக்கால் - திருவாரூா் இடையே இயக்கப்படாது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT