திருச்சி

வீடு புகுந்து நகைகள் கொள்ளை

29th Sep 2022 12:03 AM

ADVERTISEMENT

திருச்சியில் வீடு புகுந்து நகைகளைப் பறித்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி கே.கே.நகா், எல்ஐசி காலனி, சண்முகா நகா் பகுதியைச் சோ்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறாா். கணவா் வெளிநாட்டில் உள்ள நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில், தாயும், மகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமாா் 3 மணியளவில் அவா்களது வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா் பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, அவரின் நகைகளை பறித்தாா். பின்னா் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா். புகாரின்பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT