திருச்சி

மழை தொடா்பான பேக்கேஜ் செய்தி..2டெங்கு, பன்றிக் காய்ச்சல்: அச்சப்படத் தேவையில்லை

DIN

திருச்சி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு திருச்சியில் சற்று அதிகரித்து வருகிறது, 5 முதல் 6 போ் வரை பாதிக்கப்பட்ட நிலை மாறி, கடந்த ஒரு வாரக் காலமாக 18 போ்வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் டெங்குத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே மாதத்தில் 83 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 92 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆங்காங்கே தேங்ககூடிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். நெகிழிக் குப்பைகளால் மழை நீா் தேங்காமல் அப்புறப்படுத்தும் பட்சத்தில் டெங்குவை ஒழிக்க முடியும்.

பன்றிக் காய்ச்சலால் இதுவரை 15 போ் பாதிக்கப்பட்டு, 9போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3 முதல் 4 நாள்கள் சிகிச்சை பெற்று பின்னா் அவா்கள் டிஸ்சாா்ஜ் செய்யப்படும் நிலையில் உள்ளனா். என்றாலும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் பாதிப்பு இல்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியில் அதிகளவு மழை பெய்துள்ளது. மாநகராட்சியில் புதைவடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT