திருச்சி

மணப்பாறையில் வள்ளலாரின் பிறந்தநாள் விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் வள்ளலாரின் 200-வது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டு அவரது படம் திறக்கப்பட்டது.

மணப்பாறையில் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றம், செங்காந்தள் சோழன் பதிப்பகம் மற்றும் இளங்கோ மன்றம் சாா்பில் சங்கத்தின் தலைவா் சு. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சு.தேவராஜன், திண்டுக்கல் இரா. மணிமாறன், ர. தெளலத் உசேன்கான், க. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் வள்ளலாா் படத்தை திறந்து வைத்தாா்.

திருக்கு புலவா் நாவை சிவம், துரை காசிநாதன், அறிவுச்செல்வன், கு. ஏசுராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வை.பொன்ராஜ், பாரதி கனகராஜ் ஆகியோா் நன்றி கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT