திருச்சி

ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தூா் பகுதியில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.

திருச்சி மாவட்டம் கூத்தூா் ஸ்ரீவாரி அவென்யூவைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மனைவி மணி பாரதி (50), தில்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை. இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு திருப்பத்தூா் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகை ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT