திருச்சி

திருச்சி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள்!

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விடுமுறை தினங்கள், பண்டிகை காலத்தையொட்டி திருச்சி கடைவீதிகளில் புதன்கிழமை பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

பள்ளிகளில் காலாண்டுத் தோ்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நவராத்திரி பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைவீதிகளில் ஜவுளிகள், நகைகள், இதரப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனா்.

குறிப்பாக, ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ள என்எஸ்பி சாலை, மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு, சூப்பா் பஜாா், தில்லை நகா், கண்டோன்மென்ட், மத்திய, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும், விடுமுறை நிறைவடைவதையொட்டி வெளியூா் செல்லும் தொழிலாளா்கள், தனியாா் பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் மத்தியப் பேருந்து நிலையத்தில் குவிந்தனா். இதேபோல, ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT