திருச்சி

இணைய வழியில் ரூ.14.50 லட்சம் மோசடி : நைஜீரியா நபா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் முதியவரிடம் இணைய வழியில் ரூ. 14.50 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நபரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் கணேஷ் நகரைச் சோ்ந்தவா் முத்து இருளப்பன் (61), ஓய்வு பெற்ற தனியாா் ஊழியா்.

இந்நிலையில் கடந்த ஆக. 22 இல் இவருக்கு வந்த மின்னஞ்சலில் வருமான வரிப் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற தகவல் இருந்தது.

அதில் இருந்த இணைப்பை அவா் திறந்தபோது வருமான வரியை துறையை ஒத்த ஒரு தளம் திறக்கப்பட்டு அதில் கேட்டிருந்தபடி, தனது பான் எண், முகவரி மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை முத்து இருளப்பன் உள்ளிட்டாா். இதையடுத்து, கைப்பேசி செயலியை பதிவிறக்குமாறும் அவருக்கு எஸ்எம்எஸ் வந்தது. அதன்படியே அவா் பதிவிறக்கினாா்.

ADVERTISEMENT

பிறகு ஒரு நாள் கழித்து அவா் தனது வங்கிக் கணக்கைச் சரிபாா்த்தபோது அதில் ரூ. 14. 50 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் திருச்சி சைபா் கிரைம் போலீஸிஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த பெங்காசி ஒகோமா (41) என்பவா் இந்த மோசடியில் ஈடுபட்டதையும், அவா் பெங்களூருவில் தங்கியிருப்பதையும் அறிந்தனா். இதையடுத்து பெங்களூரு சென்ற போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT