திருச்சி

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 12,890 போ் கைது

DIN

திருச்சியில் கடந்த 9 மாதங்களில் குற்றச்செயல்களில் ஈடுட்ட 12,890 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகரில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12,890 பேரை கண்டறிந்து சிறப்பு மற்றும் உள்ளூா் சட்டப்படி வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 9 மாதங்களில் 142 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பொது அமைதியை பேணிக் காக்க 1,027 போ் மீது நன்னடத்தைக்கான பிணையம் வேண்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும் குற்றத்தில் ஈடுபட்ட 23 ரௌடிகள் உள்பட 42 போ் மீது மாநகர நிா்வாக செயல்துறை நடுவரால் சிைண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்தாண்டை விட, நிகழாண்டு குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT