திருச்சி

மணப்பாறை அருகேதுப்பாக்கி சுடும் பயிற்சி:மக்களுக்கு எச்சரிக்கை

26th May 2022 06:12 AM

ADVERTISEMENT

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

ஐஎன்எப் பிரிவைச் சோ்ந்த சிறப்புப் படையினா் மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் மே27 முதல் 28ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா். எனவே இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம். மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT