திருச்சி

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

6th Jul 2022 11:47 PM

ADVERTISEMENT

 

கணவா் மதுவுக்கு அடிமையானதால் விரக்தியடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி வரகனேரி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி முத்துமணி (30). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இரும்பு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வந்த மணிகண்டன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்ற மணிகண்டன் பிற்பகல் மது போதையில் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கி விட்டாா். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த முத்து மணி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

மணிவண்ணன் மாலையில் கண்விழித்தபோது முத்துமணி சடலமாக தூக்கில் தொங்கியது தெரியவந்தது. புகாரின் பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT