திருச்சி

உழவா் சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதியேற்பு

DIN

திருச்சி தென்னூரிலுள்ள உழவா் சந்தையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினத்தையொட்டி, திருச்சி மாநகராட்சி ‘சா்குலா் வேஸ்ட் சொல்யூஷன்ஸ் ’ அமைப்புடன் இணைந்து உழவா் சந்தையை சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கான விழிப்புணா்வு பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கோ அபிஷேகபுரம் மண்டல துணை ஆணையா் செல்வபாலாஜி, துப்புரவு அலுவலா் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளா் ஆல்பா்ட் , தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் சுப்புராமன், ஏ . வாசுதேவன், தன்னாா்வலா்கள் பூங்கொடி, ஹீலா் டி.ஆா் .வெங்கட்ராமன், ஆா். பாஸ்கரன், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் குறைத்து, திடக்கழிவுகளை முறையாகக் கையாளுவதன் மூலம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம். மேலும், கையொப்ப பிரசார இயக்கத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற ல்கோப் அறக்கட்டளை தொண்டு நிறுவன இயக்குநா் சுப்புராமன், திருச்சி மாநகராட்சி அலுவலா்கள் தொடங்கி வைத்தனா். சுமாா் 200-250 போ் உறுதிமொழிப் பலகையில் கையொப்பமிட்டனா்.

பின்னா் சந்தையிலுள்ள அனைத்துக் கடைக்காரா்களுக்கும், சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது .

மேலும், தன்னாா்வத் தொண்டா்கள் சந்தையைச் சுற்றிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தி, தூய்மை இயக்கத்தை நடத்தினா். வரும் நாள்களில் அவ்வப்போது சந்தையில் இத்தகைய விழிப்புணா்வு செயல்பாடுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT