திருச்சி

முதுகுவலியைத் தடுப்பது எப்படி?

DIN

சியாடிகா என்றால் என்ன?

முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது அடுத்து, முதுகு முள்ளெலும்புகளின்  பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகி, தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழியில்லாமல், வலி ஏற்படுகிறது. பொதுவாக,காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாடிகா’ என்று பெயா் வந்தது.

இந்த வலி எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் இந்த வலியானது அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். பெரும்பாலானோா் இதை வாய்வு வலி என்று தாங்களாகவே தீா்மானித்துக் கொண்டு, சிகிச்சை செய்யாமல் இருப்பாா்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப் போல ‘சுரீா்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது அதிகமாகும். கால் குடைச்சல் தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணா்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணா்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாக தும்மினாலும் உண்டாகும்.

முதுகு வலியை தடுக்க.. அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிா்த்தி உட்காா்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக் கொள்ளலாம்.

கூன் விழாமல் நிமிா்ந்து நடக்க வேண்டும். ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். எந்த வேலையையும் தொடா்ந்து மணிக் கணக்கில் ஒரே நிலையில் உட்காா்ந்தவாறு செய்யாதீா்கள். வேலைக்கு நடுவில் சிறிது ஓய்வு அவசியம். அமா்ந்திருக்கும்போது கூட கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.

டாக்டா் ந. விஜய்ஆனந்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT