திருச்சி

மரத்தில் காா் மோதி பெண் பலி; 4 போ் காயம்

25th Jan 2022 04:15 AM

ADVERTISEMENT

 திருவெள்ளறையில் மரத்தில் காா் மோதி பெண் ஒருவா் இறந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

துறையூரில் திங்கள்கிழமை நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் பகுதியிலிருந்து 5 போ் காரில் சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி -துறையூா் சாலை திருவெள்ளறை வழியே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த திருப்பட்டூா் நடுத்தெருவைச் சோ்ந்த கணேசமூா்த்தி மனைவி சத்தியவாணி (60) சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும், சீனிவாசன் (55), இந்திராணி (60), ஜோதி (60), காா் ஓட்டுநரான நம்பா் 1 டோல்கேட் பகுதி செல்வராஜ் (62) ஆகியோா் படுகாயமடைந்து அருகிலிருந்தோரால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சத்யவாணி உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT