திருச்சி

சிறையிலிருந்து பிணையில் வருபவா்களைக் கண்காணிக்க தனிப்படைகள்

DIN

திருச்சி: திருச்சி மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று, பின்னா் பிணையில் வெளியே வருபவா்களைக் கண்காணிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரில் கொலை, கொள்ளை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல், போதை பொருள்கள் விற்றவா்கள், சங்கிலிபறிப்பு, திருட்டு மற்றும் தொடா்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவா்கள் என்ற வகையில், கடந்த 7 மாதங்களில் 530 போ் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதன் தொடா்ச்சியாக, 85 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் திருச்சி மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக, காவல் துணை ஆணையா்கள் சக்திவேல், முத்தரசன் தலைமையில் காவல்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில்யநடைபெற்றது.

அப்போது சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தவா்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, 2 தனிப்படைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் செல்பவா்கள், குறிப்பிட்ட நாள்களில் பிணையில் வெளியே வருகின்றனா். இதன் பிறகும் பழிவாங்கும் எண்ணத்தில் மேலும் குற்றங்களில் ஈடுபட திட்டமிடுகின்றனரா அல்லது வழக்கில் சிக்க வைத்த நபா்கள் மற்றும் குடும்பத்தினா் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரா, சிறைக்குள் புதிய நண்பா்களுடன் பழகி, வெளியே வந்து குற்றச்செயல்களில் ஈடுபட திட்டமிடுகின்றனரா, திருந்தி வாழும் வகையில் வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியைத் தனிப்படையினா் மேற்கொள்ளவுள்ளனா்.

அதன்படி மாநகரத்தில் தெற்கு மற்றும் வடக்குக்கு தலா ஒன்று என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT