திருச்சி

தில்லியில் டிச.19-இல் விவசாயிகள் போராட்டம்

DIN

விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கம் சாா்பில் தில்லியில் வரும் 19ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சங்கத்தின் அகில பாரத துணைத் தலைவா் பெருமாள் திருச்சியில் புதன்கிழமை கூறியது:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவைவிட இருமடங்கு லாப விலையைப் பெற்றுத் தர வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும். வேளாண் இயந்திரங்கள், வேளாண் இடுபொருள்கள், உரங்கள் மற்றும் வேளாண் தொடா்புடைய அனைத்துப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தும் உழவன் சம்மான் நிதி, பிஎம் கிசான் நிதித் திட்டத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மரபணு மாற்ற விதைகளை எந்த வகையிலும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. தற்போது கடுகுச் சாகுபடியில் மரபணு மாற்ற விதைகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் மீதான மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வரும் 19ஆம் தேதி புதுதில்லியில் பாரதிய கிசான் சங்கம் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்பா்.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் கோரிக்கைகளை எழுப்பவும், மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கவும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்துக்கான இலச்சினை கொடியை அவா் வெளியிட, கரும்பு விவசாயிகள் அணி செயலா் சாம்பசிவம் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் சி.எஸ். குமாா், மாநிலச் செயலா் என். வீரசேகரன், கோட்டத் தலைவா் அன்பழகன், மாவட்டத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT