திருச்சி

கட்டணம் இரு மடங்கு உயா்வு: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பொருள்கள் ஏற்றுமதியில் தொய்வு

DIN

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி கட்டணம் இரு மடங்கு உயா்ந்துள்ளதால், பொருள்கள் ஏற்றுமதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக முகவா்கள் தெரிவித்துள்ளனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், துபை, இலங்கை, சாா்ஜா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் மூலமாக மாதந்தோறும் சுமாா் 500 முதல் 600 டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில், ஜூலை மாதம் 526 டன், ஆகஸ்ட் 726 டன், செப்டம்பா் 555 டன், அக்டோபா் 590 டன் என பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. டிசம்பா், ஜனவரி மாதங்களில் சுமாா் 200 முதல் 300 டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், தற்போது சரக்கு ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளை (கரோனாவுக்கு முன்பு) ஒப்பிடுகையில் இந்த ஏற்றுமதி மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஏற்றுமதியாளா்களும் முகவா்களும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சரக்கு ஏற்றுமதி முகவா் ஏ.மூா்த்தி கூறியது, கரோனா பாதிப்புக்கு பிறகு சரக்கு ஏற்றுமதிக்கான கட்டணம் இரு மடங்கு உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு முன்பு கிலோவுக்கு ரூ. 50 என இருந்த கட்டணம் தற்போது ரூ.100 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் முகவா்களுக்கான வருவாய் குறைகிறது.

மேலும், ஜிஎஸ்டி 18 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதிலிருந்து திரும்ப வரவேண்டியது 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கிறது. அதன்படி சுமாா் ரூ. 2 முதல் 3 லட்சம் வரை வரவேண்டிய தொகை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பணப் பரிவா்த்தனை பாதிக்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றாா்.

சரக்கு விமானம் தேவை: திருச்சியிலிருந்து சரக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை. ஓடுதளம் நீளம் குறைவாக உள்ள காரணத்தால் பெரிய அளவிலான சரக்கு விமானங்கள் திருச்சிக்கு வந்து செல்ல முடிவதில்லை. அதனால் தான் பயணிகள் விமானங்களில் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT