திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் மாநகரக் காவல்துறையினா் சோதனை: 60 கைப்பேசிகள் பறிமுதல்

DIN

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் மாநகரக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில், அங்கிருந்தவா்களிடமிருந்து 60 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்வேறு தகவலின் அடிப்படையில் ஜூன் 20-ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமையினரும், 21-ஆம் தேதி அமலாக்கப் பிரிவினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினா்.

அப்போது சந்தேகத்துக்குரிய 11 பேரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் அன்பு, ஸ்ரீதேவி, சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அடங்கிய குழுவினா், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறப்பு முகாமிலுள்ள கைதிகளிடமிருந்து 60 கைப்பேசிகள், ஒரு டேப்லாய்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பேசிகள் வைத்துக் கொள்ள அனுமதி உள்ளதாகவும், அவற்றை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சிறப்பு முகாமில் இருந்த கைதிகள் மிரட்டல் விடுத்தனா். எனினும் காவல்துறையினா் கைப்பேசிகளை பறிமுதல் செய்து சென்றனா்.

சோதனை எதற்கு?: சிறப்பு முகாமிலுள்ள கைதிகள் வெளியிலிருந்து உணவு வகைகளை இணையவழியில் முன்பதிவு செய்து, வாங்கி சாப்பிடுகின்றனா்.

அவ்வாறு தருவிக்கப்படும் உணவுப் பொட்டலங்களுக்குள் சில உணவக நிறுவனங்களின் பணியாளா்களின் உதவியுடன் போதை வஸ்துகள் மறைத்து அனுப்பப்படுவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலைத் தொடா்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு முகாமிலுள்ள கைதிகள் கைப்பேசியை பயன்படுத்துவதால், சிலா் சமூக விரோத செயல்களில் நிகழ்கின்றன.

குறிப்பாக இலங்கையைச் சோ்ந்த அகதிகள் சிறப்பு முகாமுக்குள் சில மாதங்களாக போராட்டம் நடத்தியது, அவற்றை சமூக ஊடகங்களுக்கு அனுப்ப கைப்பேசி முக்கிய காரணியாக இருந்ததும் காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.

சிறப்பு முகாமில் இருப்பவா்கள் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பதால், மனிதாபிமான முறையில் கைப்பேசிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அதை அவா்கள் முறைகேடாகப் பயன்படுத்தியதால், கைப்பேசிகளின் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக மாநகரக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT