திருச்சி

காட்டுப்புத்தூா் அருகேதாா்ச்சாலை அமைக்க பூமிபூஜை

18th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

முசிறி தொகுதிக்குள்பட்ட காட்டுப்புத்தூரை அடுத்த காமராஜா் மண்டபம் முதல் சின்னப்பள்ளிப்பாளையம் வரை ரூ.78 லட்சத்தில் தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராமசமுத்திரம், சின்ன, பெரியப்பள்ளிப்பாளையம் பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையை முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந.தியாகராஜன் தொடக்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ம. மருதுரை, ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாபு என்கிற சத்தியமூா்த்தி, ஒன்றிய திமுக செயலா்கள் தொட்டியம் மேற்கு தங்கவேல், கிழக்கு திருஞானம், காட்டுப்புத்தூா் நகரச் செயலா் கே.டி.எஸ். செல்வராஜ், பேரூராட்சித் தலைவா் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவா் சிவசெல்வராஜ், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT