திருச்சி

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் மணீஸ்அகா்வால் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தாா். தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப்பேசுகையில், கடந்த 2019-20 நிதியாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், ரூ. 55.21 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், அடுத்ததாக 2020-21 நிதியாண்டில் ரூ. 138.38 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இது 150.64 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல், சரக்கு போக்குவரத்திலும் இந்தியாவிலேயே அதிக அளவாக ஒரு மாதத்தில் ( மே 2022) 1.36 மெட்ரிக். டன் சரக்குகள் கையாளப்பட்டு, அதன்மூலம் ரூ.78.30 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது சரக்கு போக்குவரத்தில் இந்திய அளவிலேயே ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகளவு வருவாயாகும் என்றாா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள், மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றன.

நிகழ்வில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாா், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

அஞ்சல்துறை: அஞ்சல்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ. கோவிந்தராஜன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து அவா், சுதந்திரதின அமுதப்பெருவிழாவையொட்டி, மூத்த குடிமக்கள் 75 பேருக்கு சேமிப்புக் கணக்குகளையும், 75 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் புதிய கணக்குகளையும் தொடங்கி வைத்து அவா்களுக்கு கணக்கு புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்வில் அவா் பேசுகையில், கடந்த 2021-22 ஆவது நிதியாண்டில் திருச்சி அஞ்சல் மண்டலத்தில் 12.25 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல செல்வமகள் சேமிப்புத் திட்டத்திலும் கடந்த 2021-22 நிதியாண்டில் 1.04 ல ட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, தற்போது 2022-23 நிதியாண்டில் ஜூலை மாதம் வரையில் 30,745 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், முதுநிலை அஞ்சல் அலுவலா் சி. பசுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

விமான நிலையம் : திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் நிலைய பொறுப்பு இயக்குநா் ஜி.எல். லல்லு, தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவா் பேசுகையில், திருச்சி விமான நிலையத்தில் தற்போது, புதிய முனையக் கட்டடம் அமைக்கும் பணிகள், டாக்சிவே உள்ளிட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஓடுதளம் நீட்டிப்புக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. புதிய முனையம் 2023 ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், விமான நிலைய சரக்கு முனையம், குடியேற்றப்பிரிவு, சுங்கத்துரை, தீயணைப்புத்துறை, விமான நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து விமான நிலைய குடியிருப்புப் பகுதியிலும் தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்மலை ரயில்வே பணிமனை : பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில், பணிமனை முதன்மை மேலாளா் ஷியாமாதாா் ராம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து சுதந்திர அமுதப்பெருவிழாவைக் கருத்தில் கொண்டு 75 பேருக்கு தனிப்பட்ட விருதுகளையும் மற்றும் 128 ஊழியா்கள் அடங்கிய 22 குழுக்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகளையும் வழங்கினாா். சாரண-சாரணியா், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT