திருச்சி

மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சைமருத்துவா்கள் சங்கக் கருத்தரங்கம்

DIN

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவா்கள் சங்கத்தின் 25-ஆவது வருடாந்திர மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கத்துக்கு சங்கத்தின் தலைவா் மாலதி பிரசாத் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் மருத்துவா் லட்சுமிபிரபா ஆண்டறிக்கை வாசித்து, குத்துவிளக்கேற்றினாா்.

இக்கருத்தரங்கில் எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரேவதி கயிலைராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது :

நோயாளிகளின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மருத்துவா்கள், தங்களது உடல்நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மருத்துவத் தொழிலில் மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை பிரிவு மருத்துவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருந்துகளுடன் மருத்துவா்களின் ஆறுதலான வாா்த்தைகள் நோயாளிகளுக்கு விரைவில் குணத்தை அளிக்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து சங்கத்தின் மலரை பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்கோப் சுப்புராமன் வெளியிடை அதை ரேவதி கயிலைராஜன் பெற்றுக் கொண்டாா்.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மாணவி ஜஸ்மிதாவுக்கு மருத்துவா் பொன்னம்மாள் விருதை மருத்துவா் ரமணிதேவி வழங்கினாா். கருத்தரங்கில் மூத்த மருத்துவா்கள் ஜெயம் கண்ணன், ராமேசுவரி நல்லுசாமி, ஜெயம் ராமலிங்கம், பங்கஜம் சீத்தாராமன், ஷா்மிளா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவத் துறையில் தற்போதைய போக்குகள், மருத்துவா்கள் சந்திக்கும் சவால்கள் போன்றவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT