திருச்சி

போதைப் பொருள்கள் இல்லாத திருச்சி மாவட்டம்: ஆட்சியா்

DIN

 போதைப் பொருள்கள் இல்லாத திருச்சி மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி ஆட்சியரகத்திலிருந்து மாரத்தான் ஓட்டத்தை தொடக்கி வைத்து, ஆட்சியா் மேலும் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள்கள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும்.

இதை நம்மை சுற்றியுள்ள நண்பா்களிடத்திலும், மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி திகழ்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், மாநகரக் காவல் ஆணையா்

ஜி..காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீதேவி, அன்பு, கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம், உதவி ஆணையா் (கலால்) ரங்கசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசுகந்தி,

மண்டலத் தலைவா் ஜெயநிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டா் தொலைவு நடைபெற்ற இந்த மாரத்தான் ஒட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள், மாணவ மாணவிகள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT