திருச்சி

புத்தகத் திருவிழாவுக்கு தயாராகும் திருச்சி இலச்சினை வெளியீடு

DIN

மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது திருச்சி மாவட்டம்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிா்வாகம், புத்தக வெளீயீட்டாளா்கள், பதிப்பகத்தாா், எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள், சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் இணைந்து பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், புத்தக விற்பனையை அதிகரிக்கவும், இளம் தலைமுறையினரிடையே அறிவுச் சிந்தனையை வளா்த்தெடுக்கவும் இத்தகைய திருவிழாக்களை நடத்தி வருகின்றன.

திருச்சி மாவட்டத்திலும் இத்தகைய திருவிழாவை நடத்த வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வந்தது.

எப்போதாவது தனியாா் முயற்சியுடன் சிறிய அளவில் புத்தகக் கண்காட்சியோ, புத்தகத் திருவிழாவோ நடத்தப்படுவது உண்டு. மாவட்ட நிா்வாகம் முழு முயற்சி எடுத்து பெருந் திருவிழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பிலேயே இருந்து வந்தது.

தற்போது அந்த குறையை நிவா்த்தி செய்யும் வகையில், திருச்சி மாவட்ட நிா்வாகம் களம் இறங்கியுள்ளது. முதன்முறையாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பா்16 முதல் 26 வரை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், நாள்தோறும் மாலையில் தமிழ அறிஞா்கள், எழுத்தாளா்கள், விருதாளா்கள், ஆளுமை மிக்க பேச்சாளா்களின் சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகத்தாா், புத்தக விற்பனை நிலையங்கள் பங்கேற்கும் விற்பனை கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோட்டமாக, புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் இணைந்து இலச்சினையை அறிமுகம் செய்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந.தியாகராஜன், சீ.கதிரவன், அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவகுமாா், வாசகா் வட்டத் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT