திருச்சி

போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

12th Aug 2022 12:32 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் சுமாா் 10,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அபிராமி, எம்எல்ஏக்கள் எஸ். இனிகோ இருதயராஜ், எம். பழனியாண்டி, அ. செளந்திரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன், மேயா் மு. அன்பழகன், திருச்சி சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் அமைச்சா் கே.என். நேரு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற உறுதியேற்பு நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்வில் அமைச்சா் நேரு கூறுகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரைகளை காவல்துறை அதிகாரிகள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பின்பற்றுவா். எம்எல்ஏக்களும் போதைப்பொருள் தடுக்கும் காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கே பேசிய எம்எல்ஏ அப்துல் சமது, பள்ளிகள்தோறும் இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

போலி லாட்டரி விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முனையம் அமைக்கும் பணிகளுக்கான இரண்டாவது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதை சாக்கடை மற்றும் குடிநீா் குழாய்கள் பதிக்க சாலைகளை தோண்டியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அந்தப் பணிகள் முடிந்த இடங்களில் சாலைப் பணி வேகமாக நடைபெறுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT