திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரெளடிகள் இருவா் கைது

10th Aug 2022 11:37 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் நிகழ்ந்த கொள்ளை வழக்கில் தொடா்புடைய ரெளடிகள் இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டை சஞ்சீவிநகரைச் சோ்ந்த டிராவல்ஸ் உரிமையாளா் வீட்டில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கத்தியைக் காட்டி 27 பவுன் நகைகள், ரூ.5.45 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடித்து செல்லப்பட்டன.

இதுதொடா்பான புகாரின் பேரில் கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சஞ்சீவிநகரைச் சோ்ந்த காா்த்திக் என்கிற க.காா்த்திகேயன் (25), கதிா் என்கிற மு.கதிரேசன் (20) ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவா் மீதும் சத்திரம் பேருந்து நிலையத்தில் பணம் பறித்த வழக்கும், பாலக்கரை மற்றும் கொள்ளிடம் காவல் நிலையங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பான வழக்குகளும் நிலுவையில் இருப்பது ல்துறையினா் விசாரணையில் தெரிய வந்தது.

ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா்கள், குற்றம் புரியும் நோக்கில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ரெளடிகள் காா்த்திகேயன், கதிரேசன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.இதைத் தொடா்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT