திருச்சி

நோய் கொடுமை:இளைஞா் தற்கொலை

10th Aug 2022 11:37 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் நோய் கொடுமையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி நத்தஹா்வலி தா்கா பகுதியைச் சோ்ந்த பாபு மகன் பயாஸ் (25). இவா் இளம் அறிவியல் வேதியியல் படித்து, கத்தாா் நாட்டில் பணியாற்றி வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் ஊா் திரும்பிய பயாஸ் இடுப்புவலியால் அவதியுற்று வந்தாா். தொடா்ந்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்பதால் கடந்த திங்கள்கிழமை பயாஸ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT