திருச்சி

காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலம்

14th Apr 2022 01:45 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை பொது ஏலம் விடப்பட்டன.

திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இதில் 13 இரண்டு சக்கர வாகனங்கள், ஒரு டெம்போ டிராவலா், 2 ஜீப்புகள் என 16 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. இதில் கிடைத்த ரூ.3.39 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மாநகரக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களை விருப்பமுள்ளவா்கள் பொது ஏலத்தில் எடுத்துக் கொள்ள தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் ஜி.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT