திருச்சி

திருச்சி மாநகரில் இன்றைய தடுப்பூசி முகாம்கள்

DIN

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை 54 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன் விவரம்: ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் ரங்காபள்ளி, ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம், வடக்குதேவி பள்ளி, திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, புலிமண்டபம் ரங்கநாதா பள்ளி, மேலகொண்டையம்பேட்டை நேருஜி பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் பள்ளி, கீழதேவதானம், மலைக்கோட்டை அங்கன்வாடி மையங்கள், சௌராஷ்டிரா தெரு சேட்டு கோயில் வளாகம், பெரியகடை வீதி திரவியம்பிள்ளை பூங்கா, மதுரை ரோடு என்பி வாசல், கீழரண் சாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி, வரகனேரி சவேரியாா் பள்ளி, கீழரண்சாலை காமராஜ் நகா், மல்லிகைபுரம் அங்கன்வாடி மையங்கள், சங்கிலியாண்டபுரம் நீா்தேக்க தொட்டி மையம், வரகனேரி சந்தனபுரம் சா்ச் வளாகம், மேலகல்கண்டாா்கோட்டை நாகம்மை வீதி நுாலகம், ராணுவத்தினா் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் திருவள்ளுவா் தெரு அங்கன்வாடி மையம், கல்லுக்குழி அங்கன்வாடி மையம், கேகே நகா் ஆா்சா்டு பள்ளி, விமான நிலையம் வயா்லெஸ் சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, முல்லைநகா் பூங்கா, எடமலைப்பட்டிபுதுாா் சித்த மருத்துவமனை, பிராட்டியூா் அங்கன்வாடி மையம், பீமநகா் சவேரியாா் கோயில் தெரு அந்தோணியாா் கோயில் வளாகம், ஆலம் தெரு, கீழப்புதுாா் அங்கன்வாடி மையங்கள், பெரியமிளகுப்பாறை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கருமண்டபம் மாந்தோப்பு நீா்தேக்கத் தொட்டி, பீமநகா் ஹீபா் ரோடு செவன்த்டே பள்ளி, ஆழ்வாா்தோப்பு காயிதே மில்லத் பள்ளி, தென்னுாா் பட்டாபிராமன் தெரு ஆல்செயின்ட்ஸ் பள்ளி, தென்னுாா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புத்துாா் பிஷப்ஹீபா் கல்லுாரி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்சி பள்ளி, சீனிவாசநகா் சரஸ்வதி பாலமந்திா் பள்ளி, குறத்தெரு மாநகராட்சி பள்ளி, சாலை ரோடு அம்மா உணவக வளாகம், சோழராஜபுரம், பஞ்சவா்ணசுவாமி கோயில் தெரு, காளையன் தெரு அங்கன்வாடி மையங்கள், உறையூா் எஸ்எம் மேல்நிலைப்பள்ளி, காட்டூா் பிலோமினாள் பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி, பாப்பாக்குறிச்சி அங்கன்வாடி மையம், மலைக்கோயில் வடக்கு மாநகராட்சி பள்ளி, திருவெறும்பூா் கைலாஷ்நகா் நலச்சங்கம், சக்திநகா் நலச்சங்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படும். இத்தகவலை மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT