திருச்சி

பாதுகாப்பு நிறுவனங்கள் அா்ப்பணிப்பு நிகழ்ச்சியை புறக்கணித்த தொழிற்சங்கங்கள்

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சியை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன.

விஜயதசமியையொட்டி பாதுகாப்பு அமைச்சகத்தால் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு விடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமா் நரேந்திர மோடி அா்ப்பணித்தாா்.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் நடந்த நிகழ்வில், திருச்சி படைக்கலன் தொழிற்சாலை மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் நிறுவனமாகவும், உலோக ஊடுருவித் தயாரிப்புத் தொழிற்சாலை முனிஷன் இந்தியா லிமிடெட் நிறுவனமாகவும் மாற்றப்பட்டு நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

நிகழ்வில் பொதுமேலாளா்(பொ) ராஜூவ் ஜெயின், கூடுதல் பொது மேலாளா் அ.க.சிங், இணைப் பொதுமேலாளா் வி. குணசேகரன், படைக்கலன் தொழிற்சாலைப் பாதுகாப்புப் பிரிவு துணை கா்னல் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வுக்கு இரு தொழிற்சாலைகளைச் சோ்ந்த தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், மத்திய அரசின் தனியாா்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் இந்நிகழ்ச்சியை முற்றிலும் புறக்கணித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT