திருச்சி

அரியாற்றுக்கரை உடைப்பு: குடியிருப்புகளைச் சூழ்ந்த நீா்

DIN

திருச்சியில் புங்கனூா் பகுதியில், அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், பிராட்டியூா் பகுதியில் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மணப்பாறை அருகே உற்பத்தியாகும் அரியாறு, திருச்சி பிராட்டியூா் தீரன் நகா் பகுதியில் கோரையாற்றில் கலக்கிறது. கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் மழையால், புங்கனூா், அல்லித்துறை பகுதிகளுக்கு இடையில் பலவீனமாக இருந்த அரியாற்றின் தென் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் ஞாயிற்றுக்கிழமை பகல் திடீரென அரியாற்றுக் கரை உடைந்தது.

விவசாய நிலங்கள், குடியிருப்புகளைச் சூழ்ந்த நீா்: இதனால் வெளியேறிய நீரால் புங்கனூா் பகுதியில் சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. வெள்ள நீா் பிராட்டியூா், தீரன் நகா் வழியாக கோரையாற்றில் வடிந்து செல்கிறது. இடைப்பட்ட பகுதியிலுள்ள குடியிருப்புகளையும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

தீரன்நகா் பகுதியிலிருந்து சாலையைக் கடந்து ஆக்ஸ்போா்டு கல்லூரி பகுதியில் வெள்ள நீா் செல்கிறது. அதேபோல கருமண்பத்தில் கொல்லாங்குளம் நிரம்பிய நீா் மற்றும் மழை வெள்ள நீா், கருமண்டபம் பகுதியில் சாலையைக் கடந்து தேசியக் கல்லூரி வழியாகச் சென்று சாலைகளில் தேங்கியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். இதையடுத்து வருவாய்த் துறையினா், மாநகராட்சியினா், போலீஸாா் இணைந்து மீட்பு, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

போக்குவரத்து மாற்றம்: சாலைகளை தண்ணீா் சூழ்ந்ததால் திருச்சி -திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், மணப்பாறை சென்று வரும் வாகனங்கள், ராம்ஜி நகா் மற்றும் வண்ணாங்கோயிலிலிருந்து பிரிந்து செல்லும் சாலைகளில் சென்று, மணிகண்டம் பகுதியில் மதுரை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து திருச்சி வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT