திருச்சி

அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கைகள், பொதுப் படுக்கைகள், தீவிர சிகிச்சை மைய படுக்கைகள், வெண்டிலேட்டா் வசதி படுக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தொற்றாளா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்து அந்தந்த மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், மணப்பாறை மருத்துவமனை தலைமை மருத்துவா் முத்து.காா்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சந்தோஷ், நகராட்சி ஆணையா்(பொ) க.முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஸ்ரீரங்கம்: சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தாா். பின்னா், கரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதனை தொடா்ந்து, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், சேதுராப்பட்டி அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு முகாமையும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT