திருச்சி

யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அமைச்சர் கே.என்.நேரு

DIN

யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற ரைய்டு தொடர்பான அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மரவனூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஒன்றரை மாத குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்கும் விதமாகவும், நியூ மோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் தமிழக அரசின் நியூ மோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி(பி.சி.வி) தடுப்பூசி திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து முதல் தவணை ஒன்றரை வயது குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு போட்டுக்கொண்டனர். கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர்கள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் 14 வட்டாரங்களுக்கு சுமார் 25 லட்சம் மக்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அலுவலகம் ஒன்று மட்டுமே உள்ளது. தற்போது தமிழக முதல்வர் அதை இரண்டாக பிரித்து முசிறியை தலைமையிடமாக வைத்து 6 வட்டாரங்களில் உள்ள 8.40 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் தனி சுகாதார மாவட்ட அமைக்கப்படுகிறது. 

மேலும் ரூ.8 கோடி மதிப்பில் துறையூர் மருத்துவமனை கட்டடங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் ரூ3.5 கோடி மதிப்பில் லால்குடி மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்படி அனைத்து மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வரும் நாள்களில் வருகிறார் என்றார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற ரைய்டு தொடர்பான கேள்விக்கு, அவர்கள் அரசியல் காழ்புணர்ச்சி என்று தான் சொல்வார்கள், வரவேற்கிறேன் என்றா சொல்வார்கள், எங்கள் பெயரிலும் தான் வழக்கு போடப்பட்டது. நாங்க தப்பு செஞ்சா எங்க பெயர்ல போடுறாங்க, அவங்க தப்பு செஞ்சா அவங்க பெயர்ல போடுறாங்க. தப்பு யார் செஞ்சானு இறுதி முடிவு எடுக்குறது கோர்ட் தானே.

அப்போ கடந்த முறை போடப்பட்ட வழக்கு என்ற கேள்விக்கு, தொடர்ந்து எங்க பெயரில் பழி வாங்க தான் வழக்கு போட்டாங்க. அதோட தொடர்ச்சிதான் இப்போ நடக்குதா? என்ற கேள்விக்கு, .உப்பு திண்ணவ தண்ணீ குடுச்சுதான் ஆகனும், அதோட தொடர்ச்சிதானு சொல்லி மணப்பாறையில எங்கள டீல்ல உடபாக்குறீங்க. யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று முடித்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் பொது சுகாதாரம், மாவட்ட தாய் சேய் நல அலுவலர், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், மணப்பாறை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT