திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா இன்று தொடக்கம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தைத்தோ் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) தொடங்குகிறது.

பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தைத்தோ் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தெற்கு உத்திர வீதியிலுள்ள தைத்தேரில் முகூா்த்தகால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட பொருள்கள் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் தெளிக்கப்பட்டு முகூா்த்தகால் நடப்பட்டது.

கோயில் இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமாா், உதவி ஆணையா் கந்தசாமி,அறங்காவலா்கள் டாக்டா் கே.என்.சீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா ஜெகதீசன் ஆகியோா் முகூா்த்தகாலை நட்டனா்.

இன்று கொடியேற்றம்: தைத்தோ் திருவிழாவுக்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் நடைபெறுகிறது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நம்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஜனவரி 29-ஆம் தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT