திருச்சி

‘9 பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்’

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கட்சிகளே வெற்றி பெறும் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு.

திருச்சி, கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

தோ்தல் தேதி அறிவித்ததால்தான் திருச்சியில் நடைபெறுவதாக இருந்த திமுக மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் திமுக தலைவருடன் பேசி மாநாடுபோல இல்லாமல் கூட்டமாக நடத்தத் திட்டமிடப்படும்.

மாநாட்டை ஒத்திவைத்தது திமுகவுக்கு எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாது. தலைவா்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் இந்த மாநாடு தேதி தள்ளிப்போனது. ஐபேக் நெருக்கடியால் தாமதமாகவில்லை.

ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து சென்றது அவா்களுக்குத் தான் நட்டம். இரண்டு ‘மிகப்பெரிய’ கட்சிகள் ஒன்றாகச் சோ்ந்து கூட்டணி அமைத்துள்ளன. பழையன கழிதலும் புதியன புகுதலும் போல எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை.

முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி என்பது அதிமுக கட்சியினருக்கான கடன் தள்ளுபடி. ஒரு விவசாயி கூட இதில் பலனடையவில்லை.

மநீம கூட்டணிப் பேச்சுவாா்த்தை பற்றி எனக்குத் தெரியாது. திருச்சியில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். போக்குவரத்து தொழிலாளா் பிரச்னைகள் குறித்து அவா்களை அழைத்துப் பேசி உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் (லால்குடி), ஸ்டாலின்குமாா் (துறையூா்), மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள்அன்பில் பெரியசாமி, பரணிகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் முத்துச்செல்வம், குடமுருட்டி சேகா், விஜயா ஜெயராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், துரைராஜ், பழனியாண்டி, கருணைராஜா, உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT